உங்க வீட்டில் இருக்கும் டேபிள் ஃபேனை சுத்தம் செய்ய கஷ்டமா இருக்கா?? ஈஸியான வழிகளைத் தெரிஞ்சுக்கலாம் வாங்க...!!!
How To Clean Table Fan in Easy Method
ஒவ்வொருவருக்கும் தங்கள் வீட்டை அழகாகவும், சுத்தமாகவும் பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். வீடு சுத்தமாக இருக்க வேண்டுமென்றால், வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருட்களும் முதலில் சுத்தமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை சுத்தமாக பராமரிப்பது மிக முக்கியம். இல்லாவிட்டால் அவை விரைவில் சேதமடைந்து விடும். அந்த வகையில் வீட்டில் உபயோகப் படுத்தப்படும் டேபிள் ஃபேன் ஓடிக் கொண்டே இருப்பதால் விரைவில் தூசு படிந்து அழுக்காகி விடும். அவற்றை அவ்வப்போது சுத்தம் செய்வதும் அவசியம்.
இங்கு டேபிள் ஃபேனை எப்படி எளிதாக சுத்தம் செய்வது என்று பார்ப்போம்.
டேபிள் ஃபேனை சுத்தம் செய்வதற்கு முன்பு மின் இணைப்பை முதலில் துண்டித்து விட வேண்டும். பின்னர் அதன் ப்ளக்கை ஸ்விச் போர்டில் இருந்து எடுத்து விட்டு, டேபிள் ஃபேனை கழட்ட வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் வெள்ளை வினிகரைக் கலந்து, அதில் ஒரு சுத்தமான துணியைப் போட்டு சிறிது நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும். அல்லது பழைய டூத் ப்ரஷ் கூட பயன்படுத்தலாம்.
துணியை நன்கு பிழிந்துவிட்டு, டேபிள் ஃபேனை துடைக்க வேண்டும். அழுத்தி துடைக்காமல் மிக மென்மையாகவே டேபிள் ஃபேனை சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால் ஃபேனின் இறக்கைகள் உடைந்து விட அதிக வாய்ப்புள்ளது.
அடுத்து ஏதேனும் கிளீனர் அல்லது ப்ரஷ் கொண்டு டேபிள் ஃபேனின் மோட்டார் மற்றும் க்ரில்லை சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் அவை அனைத்தையும் வெயிலில் சிறிது நேரம் நன்கு உலர வைத்து, பின்னர் மீண்டும் ஒரு முறை உலர்வான, சுத்தமான துணியால் நன்கு துடைத்து விட்டு, பின்னர் மீண்டும் ஃபேனின் பாகங்களை மாட்டி விட்டு, பின்னர் இயக்கலாம்.
English Summary
How To Clean Table Fan in Easy Method