கீரையில் பக்கோடாவா? இது என்ன புது ஸ்பெஷல்.!!
how to make keerai bakoda
கீரையில் பக்கோடாவா? இது என்ன புது ஸ்பெஷல்.!!
பக்கோடா என்றால் வெங்காயம், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகளை கொண்டு தான் செய்வார்கள். ஆனால், இந்த பக்கோடாவை ஆரோக்கியமானதாக மாற்ற பக்கோடாவுக்கான மாவில் கொஞ்சம் கீரைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு விருப்பமான எந்த கீரையையும் பயன்படுத்தலாம்.
வீட்டில் சுத்தம் செய்த கீரைகள் இருந்தால் வெறும் பத்து நிமிடத்தில் இந்த பக்கோடாவை செய்திடலாம். கீரை பக்கோடா செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:-
உப்பு, பெரிய வெங்காயம், கீரை நறுக்கியது, கடலை மாவு, அரிசி கப், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோம்பு, எண்ணெய், கறிவேப்பிலை
செய்முறை:-
முதலில் கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அதன் பின்னர், ஒரு அகண்ட பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, சோம்பு, நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
இதையடுத்து, அடுப்பில் ஒரு கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அதனை ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு பக்கோடா மாவில் சேர்த்து நன்கு கலக்கவும்.
அதில், லேசாக தண்ணீர் தெளித்து பக்கோடா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். இப்போது மாவிலிருந்து ஒரு சிறிய பகுதியை எடுத்து சூடான எண்ணெயில் உதிர்த்து விடவும். பக்கோடா நன்கு வெந்து இருபுறமும் பொன்னிறமான பிறகு எண்ணெயிலிருந்து எடுக்கவும். இதோ, சூடான, சுவையான கிரேசி பகோடா தாயார்.
English Summary
how to make keerai bakoda