தேமலால் அவதிப்படுகிறீர்களா? - இதோ உங்களுக்காக.!
how to romove themal disease
சுற்றுச்சூழல் மாற்றங்களினாலும், உணவு பழக்க வழக்கங்களினாலும் நம் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக தோலில் பல வகையான வியாதிகள் உருவாகின்றன. அதில் ஒன்றான தேமல் என்பது நம் தோலில் பூஞ்சைகள் தாக்குதலால் ஏற்படும் ஒரு வகையான நோய்.
இந்த நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்: * ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு காரணமாக தோலில் தேமல் நோய் ஏற்படுகிறது.
* ஹார்மோன் மாற்றங்கள், அதிகமாக வியர்வை வெளியேறுதல், எப்போதும் அழுக்கு மற்றும் ஈரப்பதம் தோலில் இருப்பது போன்ற காரணங்களால் பூஞ்சைகள் எளிதாக தாக்கும்.

இந்தத் தேமலை எவ்வாறு சரி செய்யலாம்:-
* எலுமிச்சம் பழம் தோலை காயவைத்து பொடியாக்கி பின் சம அளவு படிகாரம் எடுத்து அதையும் பொடியாக்கி இரண்டையும் ஒன்றாக கலந்து தண்ணீருடன் சேர்த்து தேமல் இருக்கும் இடத்தில் தேய்த்து வந்தால் ஒரே வாரத்தில் தேமல் குணமாகும்.
* எலுமிச்சை சாறுடன் துளசி இலை சாறு சேர்த்து தேமலில் தேய்த்து வந்தால் விரைவில் குணம் அடையலாம்.
English Summary
how to romove themal disease