மண்பானையை எப்படி பயன்படுத்த வேண்டும்? - Seithipunal
Seithipunal


ஆதிகாலத்தில் இருந்து மக்கள் மண்பாண்டங்களை அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். பின்னர் காலத்திற்கு ஏற்றவாறு மக்கள் தங்களது பழக்கத்தை மாற்றிக் கொண்டு வருகின்றனர். இருப்பினும் ஒரு சிலர் மண் பானையை வாங்கி தண்ணீர் அருந்தும் பழக்கத்தை வைத்துள்ளனர். அதிலும் கோடை நாட்களில் மட்டும். அப்படி நாம் வாங்கும் புதிய மண்பானையை, உடனே பயன்படுத்தக் கூடாது. சுத்தம் செய்துதான் பயன்படுத்த வேண்டும். அதனை எப்படி சுத்தம் செய்யலாம் என்பது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

* எப்போதும், புதிய மண் பானையை வெளிப்புறத்தில் மட்டும் நன்றாகக் கழுவ வேண்டும். உள்பக்கத்தில் கழுவக் கூடாது.

* பானையில் தண்ணீர் ஊற்றி ஒரு நாள் முழுவதும் வைத்து விட வேண்டும்.

* பிறகு பானையை எடுத்து நிழலில் காய வைக்க வேண்டும். பிறகு பானையில் நீர் ஊற்றி வைக்க வேண்டும். சில மணிநேரத்திற்கு ஒரு முறை நீரை மாற்ற வேண்டும்.

* அதுமட்டுமல்லாமல், அரிசி கழுவிய நீரை ஊற்றி 2 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். அல்லது கல் உப்பு சேர்த்த நீரைப் பானையில் ஊற்றி அரை நாள் வரை ஊற வைக்க வேண்டும். இப்படி நன்கு கழுவிய பிறகு தான் பானையை பயன்படுத்த வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to use and clean sand pot


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->