உஷார்... ஃபிரென்ஞ்ச் ஃப்ரைஸ் சாப்பிட்டா இவ்வளவு ஆபத்தா.? - Seithipunal
Seithipunal


தற்காலத்தில் துரித உணவுகளின் பயன்பாடு மக்களிடம் அதிகரித்து வருகிறது. போதிய நேரமின்மை மற்றும் வேலை பளுவின் காரணமாக கிடைக்கும் உணவை உண்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர் இதன் காரணமாக பல்வேறு உடல் உபாதைகளுக்கும் ஆளாகின்றனர்.

தற்காலத்தில் பெரும்பாலான மக்களால் அதிகமாக விரும்பி உண்ணப்படும் உணவாக இருந்து வருவது பிரெஞ்ச் ப்ரைஸ். உருளைக்கிழங்கை பொரித்தெடுத்து தயாரிக்கப்படும் இந்த உணவை தான்  பெரும்பாலானவர்கள் நொறுக்கு தீனியாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த பிரெஞ்சு ப்ரைஸ் அடிக்கடி சாப்பிடுவது ஆபத்து என்று அமெரிக்காவைச் சார்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அந்த ஆய்வில் இது உடலுக்கு மட்டுமின்றி மனச்சோர்வுக்கும் காரணமாக அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்ச் ப்ரைஸ் போன்ற டீப் ப்ரைட்  உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் 12 சதவீதம் மனச்சோர்வு ஏற்படுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த 11 ஆண்டுகளில் 1,40,728 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளதாக அந்த ஆய்வுக் குறிப்பு தெரிவிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

If youre a fan of French fries this warning is for you


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->