இதயம் ஆரோக்கியமாக இருக்க வேர்கடலை சாப்பிடுங்க! எண்ணற்ற நன்மைகள்! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் அதிகமாக பயிரிடப்படும் பயிர்களில் ஒன்று வேர்கடலை. இது ஒரு எண்ணெய் வித்து பயிராகும். வேர்க்கடலை ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இது புரதத்தின் மிகச் சிறந்த மூலமாகவும். மேலும் இவற்றில் நல்ல கொழுப்பு மற்றும் நார்ச்சத்துக்கள் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன.

வேர்க்கடலையை எண்ணெயில் பொரித்து சாப்பிடுவதை விட மணலில் வறுத்து அல்லது அவித்து சாப்பிடுவது அதில் இருக்கக்கூடிய முழு பலன்களையும் நம் உடல் அனுபவிக்க  உதவுகிறது. வேர்க்கடலை நல்ல கொழுப்பின் சிறந்த மூலமாகும். இதனை அதிகமாக சாப்பிட்டு வர நம் உடலில் கெட்ட கொழுப்புகளின் எண்ணிக்கை குறைந்து நல்ல கொழுப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும்.

வேர்க்கடலையில் இருக்கக்கூடிய உயர் வேதிபொருட்கள் நம் உடலை  பல்வேறு விதமான நோய் தாக்குதலிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. வேர்க்கடலை அதிகமாக சாப்பிட்டு வருவதால் நரம்பு மண்டலத்தின் செயல்பாடு அதிகரித்து ரத்த ஓட்டம் அதிகரிக்கவும் உடல் சுறுசுறுப்பாக இயங்கவும் உதவுகிறது.

வேர்க்கடலையிலிருக்கும் நல்ல கொழுப்பு அதிகப்படியான பொருத்தம் மற்றும் நார்ச்சத்துக்கள் ஆகியவை நம் உடலிலிருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்த உதவுவதோடு செரிமானத் தன்மையும் அதிகரிக்கின்றன. இதனால் நமது உடல் ஆரோக்கியமாகயிருப்பதோடு இதயம் தொடர்புடைய நோய்கள் வராமல் தடுக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

is peanuts increasing the heart health


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->