காதில் நுழைந்த பூச்சியை எடுப்பது எப்படி?! பலரும் அறியாத அறிவியல் உண்மைகள்...! - Seithipunal
Seithipunal


காதில் நுழைந்த பூச்சியை எடுப்பது எப்படி?

காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

உடனடியாக காதினுள் எண்ணெய்யையோ, உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும்.

காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைபட்டு பூச்சி உடனடியாக இறந்துவிடும் அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும்.

தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு.

ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு கடிக்க ஆரம்பிக்கும்.

பூச்சி வெளியே தெரிந்தாலும் பூச்சியின் காலையோ, உடம்பையோ பிடித்து இழுக்கக்கூடாது.

ஏனென்றால் கடித்துக் கொண்டிருக்கும் பூச்சி அதிவேகமாகக் கடித்துக் கொண்டிருக்குமே தவிர விடாது.

இன்னும் வேகமாக உடம்பைப் பிடித்து இழுத்தால், பூச்சியின் உடம்பு தான் தலையிலிருந்து துண்டிக்கப்பட்டு வெளியே வரும் அல்லது பூச்சி கடித்திருக்கும் செவிப்பறையும் கிழிந்து பூச்சியின் வாயோடு வெளியே வந்துவிடும்.

ஆகவேதான் பூச்சியை முதலில் சாகடித்து விட வேண்டும். பிறகு அப்புறப்படுத்த வேண்டும்.

சிறு குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்த பிரச்சனை ஏற்படுவதுண்டு. ஜாக்கிரதையாகக் கையாளாவிட்டால் ஆபரேஷன் வரை போய் முடியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kaadhil nuzhantha poochi Eduppadhu Eppadi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->