இனி கரம் மசாலாவை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்.! இதோ டிப்ஸ்.!
karam masala preparation at home
மணமணக்கும் கரம் மசாலா பொடி நம் வீட்டிலேயே எளிமையாக செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
கரம் மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
பட்டை - 10 கிராம்
பெருஞ்சீரகம்- 100 கிராம்
அண்ணாச்சி பூ- 10 கிராம்
கிராம்பு- 10 கிராம்
ஏலக்காய் -10 கிராம்
மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் இரண்டு மணி நேரம் நல்ல வெயிலில் காய வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின் கடாயை அடுப்பில் வைத்து லேசாக சூடானவுடன் அடுப்பை அணைத்துவிட்டு அதில் நம் காய வைத்துள்ள பொருட்களை எடுத்து போட்டு நன்றாக கிளறி ஆறவிட வேண்டும்.
நன்றாக ஆறியப் பின்னர் அதை மிக்ஸியில் போட்டு அரைத்து சூடு ஆறிய பின் ஒரு காற்று புகாத பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மூடி வைக்கலாம். இப்போது சுவையான கரம் மசாலா வீட்டிலேயே தயார்.
English Summary
karam masala preparation at home