சுட்டெரிக்கும் கோடை வெயிலில் குழந்தைகள் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை.! பெற்றோர்களுக்கான டிப்ஸ்!
kids dos and dnts during summer
கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க தொடங்கி விட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் தேர்வுகள் முடிந்து கோடை கால விடுமுறை குழந்தைகளுக்க ஆரம்பமாகிவிடும். அப்போது குழந்தைகளை நாம் என்னதான் தடுத்தாலும் எப்படியாவது விளையாட சென்று விடுவார்கள். அதனால் நம் குழந்தைகளை இந்த வெயிலில் இருந்தும் அவற்றில் ஏற்படும் சரும பாதிப்புகளில் இருந்தும் எவ்வாறு பாதுகாக்கலாம் என பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு வெயில் காலங்களில் எலுமிச்சை சாறு மற்றும் பழச்சாறுகளை அடிக்கடி குடிக்க வைத்து அவர்களை புத்துணர்ச்சியுடனும் நீரேற்றத்துடனும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
கோடை வெயிலின் வெப்பத்தை சமாளிக்கவும், குழந்தைகளை கிருமி தொற்றுகளிலிருந்து காத்துக் கொள்ளவும் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குளிக்க வைக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு இறுக்கமான ஆடை அணியாமல் வெளிர் நிற காட்டன் உடைகளை அணியுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
மதியம் 12 மணி முதல் 3 மணி வரை குழந்தைகளை வெளியே செல்ல அனுமதிக்க கூடாது. இந்த நேரத்தில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
வெளியே விளையாடி விட்டு வரும் குழந்தைகளுக்கு தர்பூசணி பழங்களை சாப்பிட கொடுக்க வேண்டும். மேலும் அவர்கள் அதிகளவு தண்ணீர் குடிக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அவர்களது உடல் எப்போதும் நீரேற்றத்துடன் இருக்கும்.
கோடை காலங்களில் காரமான மற்றும் மசாலா அதிகமாக உள்ள உணவுகளை குழந்தைகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவை வயிற்று உபாதைகளை ஏற்படுத்துவதோடு அதிகளவு நீரிழப்பையும் ஏற்படுத்தும்.
குழந்தைகளுக்கு கொப்புளங்கள் பரு ஏதேனும் வந்தால் நீங்களாகவே முடிவு செய்து ஏதேனும் ஒரு மருந்தை பயன்படுத்த கொடுக்காமல் மருத்துவரிடம் அழைத்துச் சென்று ஆலோசனை பெற்று மருந்துகளை கொடுக்க வேண்டும்.
English Summary
kids dos and dnts during summer