மாசு மருவற்ற கொரியன் ஸ்கின் டோன் வேணுமா.? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க் ட்ரை பண்ணுங்க.!
Lets see how to make rice porridge facial mask for glowing skin
அழகு என்பது அனைவரும் விருப்பப்படக்கூடிய ஒன்று. பேரழகியாக இருக்க வேண்டும் என்று ஆசை ஒவ்வொருவருக்குமே இருக்கும். அதற்காக அதிக பொருட் செலவில் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் அழகு சாதன கிரீம்கள் மற்றும் கெமிக்கல் பொருட்களை பயன்படுத்தி தான் நம் முகத்தை அழகாக வைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை நம் வீட்டில் சோறு வடித்த கஞ்சியின் மூலமே பொலிவான முகத்தை பெறலாம். அதற்கான பேசியல் எப்படி செய்வது என்று பார்ப்போம்
தேவையான பொருட்கள்:
சோறு வடித்த கஞ்சி 2 ஸ்பூன்
கற்றாழை ஜெல் - 2 ஸ்பூன்
விட்டமின் ஈ கேப்ஸ்யூல் - 1
செய்முறை:
ஒரு கப் எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் சோறு வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் விட்டமின் ஈ கேப்ஸ்யூல் ஒன்று ஆகியவற்றை நன்றாக கலந்தால் நல்ல பேஸ்ட் போன்ற பதத்தில் வரும். இதனை எடுத்து நம் முகம் முழுவதும் அப்ளை செய்து 6 நிமிடங்கள் சர்குலர் மோஷனில் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் பத்து நிமிடம் அப்படியே ஊரை விட்டு குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவ வேண்டும். இந்த பேசியல் மாஸ்கை அடிக்கடி செய்து வர முகம் பொலிவான தோற்றத்துடன் பேரழக மாறும்.
English Summary
Lets see how to make rice porridge facial mask for glowing skin