மவுசு எது!!! மதுவுடன் எது கிக்கு அதிகம் குளிர்பனமா? தண்ணீரா? எதுன்னு பாக்கலாமா?
more refreshing with wine Water which one good for health
மது அருந்துபவர்கள் ரம், விஸ்கி, ஜின், பிராந்தி எதைக் குடித்தாலும் அதை ஒரு குளிர்பானத்துடன் அல்லது தண்ணீருடன் கலந்து குடிக்கிறார்கள்.இதில் எது நல்லது, எது கெட்டது என்பது பற்றி நீண்ட விவாதமே பலரிடம் நடத்துகிறார்கள்.

அதில் மதுவில் குளிர்பானம் சேர்ப்பது சுவையை அதிகரிக்கிறது இருப்ப்பினும் சர்க்கரை மற்றும் கார்பனேற்றம் ஆல்கஹாலின் கடினத்தன்மையைக் குறைக்கின்றன. எனவே, மதுவை எளிதாகக் குடிக்கலாம்.அதுமட்டுமின்றி ரம்முடன் கோக், அல்லது ஸ்ப்ரைட் கலந்த ஓட்கா போன்றவை பிரபலம்.
ஆனால் இவை சுகாதாரக் கண்ணோட்டத்தில் மிகவும் ஆபத்தானவை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் ஒரு குளிர்பானத்தில் 330 மில்லி சர்க்கரை உள்ளது, இவை கலோரிகளை அதிகரிக்கின்றன. இதில் மதுவுடன் குளிர்பானங்களை உட்கொள்வது உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.
ஆராய்ச்சிகளின் படி , சர்க்கரை ஆல்கஹால் உறிஞ்சுதலை துரிதப்படுத்துகிறது. இது அதிகப்படியான குடிப்பழக்கத்திற்கு வழிவகுக்கும்.மதுவில் தண்ணீரைக் கலந்து உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மது அருந்துவது நீரிழப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் தண்ணீர் அதன் செயல்திறனைக் குறைக்கிறது.
இது ஆல்கஹாலின் செறிவைக் குறைத்து உடலில் அதன் விளைவைக் கட்டுப்படுத்துகிறது. இன்னொரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், விஸ்கியுடன் தண்ணீரையோ அல்லது வோட்காவுடன் தண்ணீரையோ கலப்பது ஹேங்ஓவரை அதாவது காலை நேர தலைசுற்றலைக் குறைக்கும் என்று தேசிய சுகாதார நிறுவனங்கள் விளக்குகின்றன.
English Summary
more refreshing with wine Water which one good for health