எம்.எல்.ஏ முன்னிலையில் பகுதி சபை கூட்டம்..பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள்!
Area council meeting in the presence of MLA Officials listen to public grievances
ஈரோடு மாநகராட்சி 2-வது மண்டலத்தில் “பகுதிசபை கூட்டம்” எம்.எல்.ஏ முன்னிலையில் நடைபெற்றது.அப்போது பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் மனுக்களாக பெற்றுக் கொண்டனர்.
தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதிகள் 2023ன் கீழ் மாநகராட்சி பகுதிகளில் பகுதி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் ஈரோடு மாநகராட்சி, 2வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கான பகுதி சபை கூட்டம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை, வார்டு எண் 37ல் உள்ள காமராஜர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாமன்ற உறுப்பினரும், கூட்டத் தலைவருமான தீபாலட்சுமி அண்ணாதுரை தலைமையில், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், மேயர் நாகரத்தினம் சுப்ரமணியம், துணை மேயர் செல்வராஜ், ஆணையாளர் (பொறுப்பு) தனலட்சுமி, மண்டலத் தலைவர் காட்டு சுப்பு என்கிற மு.ப. சுப்ரமணியம் ஆகியோர்கள் முன்னிலையில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் மனுக்களாக பெற்றுக் கொண்டனர்.
இந்த கூட்டத்தில் திமுக மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாநகர பொறியாளர் விஜயகுமார், உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், உதவி செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர், மற்றும் உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனுக்களை வழங்கினர். இந்த கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண்பதாகவும் உறுதியளித்தனர்.
English Summary
Area council meeting in the presence of MLA Officials listen to public grievances