ஓட்ஸை விதவிதமான சுவையில் செய்து அசத்துங்கள்..! இதை ட்ரை செய்யுங்கள்..!
Oats using for healthy in tamil
ஒட்ஸ் உடன் ரவை மற்றும் அரிசி மாவு சேர்த்து சிறிது தண்ணீர் கலந்து தோசை செய்தால் சுவையாக இருக்கும்.
கார்னுடன் ஒட்ஸ் சேர்த்து பிஸ்கட் செய்யலாம். இது சுவையாகவும், சத்தாகவும் இருக்கும்.
ஒட்ஸ் உடன் கோதுமை மாவு கலந்து சப்பாத்தி செய்தால் மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும்.
வடை செய்வதற்கு மாவு அரைக்கும் பொழுது மாவு தண்ணீராகி விட்டால் அத்துடன் ஒட்ஸ் மாவினை சேர்த்து வடை செய்யலாம்.
ஒட்ஸ் உடன் வாழைப்பழம் சேர்த்து பணியாரம் செய்யலாம். இது சுவையான இனிப்பு பணியாரம் போல் இருக்கும்.
வெண்டைக்காய் பொரியலில் தேங்காய் துருவலுக்கு பதிலாக கடைசியில் பொடித்த ஒட்ஸினை சேர்த்தால் சுவையான பொரியல் தயார்.
பொடியாக நறுக்கிய காலிபிளவரை சிறிது வதக்கி அத்துடன் ஒட்ஸினை கலந்து கட்லட் செய்தால் இது மிகவும் சுவையாக இருக்கும்.
இனிப்பு கொழுக்கட்டையை அரிசி மாவில் செய்யாமல் ஒட்ஸ் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.
சாதாரணமாக உப்புமா செய்வதைப் போலவே ரவைக்கு பதில் ஓட்ஸ் சேர்த்து ஒட்ஸ் உப்புமா செய்யலாம்.
English Summary
Oats using for healthy in tamil