அழகும், ஆரோக்கியமும் தரும் பொன்னாங்கண்ணி கீரை கடைசல்.!
Ponnanganni keerai kadayal preparesan
தேவையான பொருட்கள் :
பொன்னாங்கண்ணி கீரை - ஒரு கட்டு
பயித்தம் பருப்பு - ஒரு டம்ளர்,
சின்ன வெங்காயம் - 20,
தக்காளி - இரண்டு,
பூண்டு - 10 பல்,
சாம்பார் பொடி - ஒரு ஸ்பூன்,
மிளகு, சீரகம் - ஒரு ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
கருவேப்பிலை - சிறிதளவு,
கடுகு - ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
பயித்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், மிளகு சீரகம், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு கீரையை அலசி அதில் போட்டு வதக்கி, அதனுடன் பயித்தம் பருப்பையும் சேர்த்து வதக்கி, ஆற விடவும்.
ஆற வைத்த கீரையை, மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி சாம்பார் பொடி, ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக வதக்கி, அதனுடன் மிக்ஸியில் அரைத்த கீரையும் சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கினால், சுவையான பொன்னாங்கண்ணி கடைசல் தயார்.
English Summary
Ponnanganni keerai kadayal preparesan