சரும வறட்சி - காரணங்களும், தீர்வுகளும்.. தெரிந்து கொள்வோம்..!! - Seithipunal
Seithipunal



இன்றைய சூழலில் சருமம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையாக இருப்பது சரும வறட்சி. இந்த சரும வறட்சியை சரியான ஊட்டச் சத்துக்களை எடுத்துக் கொள்வதன் மூலம் எளிதாக சரி செய்யலாம்.

பொதுவாக அனைவருக்கும் குளிர் காலங்களில் தான் சருமம் வறண்டு காணப்படும். ஆனால் இன்ன பிற காலங்களிலும் உங்கள் சருமம் வறண்டிருந்தால், சருமத்தில் அரிப்போ, வெடிப்போ, விரிசலோ ஏற்பட்டிருந்தால் உங்களுக்கு சரும வறட்சி ஏற்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். 

சில குறிப்பிட்ட சிகிச்சைகளால் ஏற்படும் பக்க விளைவுகளால், மற்றும் சில குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சினைகள் இருந்தாலும் சரும வறட்சி ஏற்படும். இதை சரி செய்ய வைட்டமின் ஏ அதிகம் உள்ள மாம்பழம், தக்காளி, பாகற்காய், உருளைக்கிழங்கு, கேரட், பப்பாளி, கீரைகள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

மேலும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி நிறைந்துள்ள எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய், கொய்யா உள்ளிட்டவை, மற்றும் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும் வைட்டமின் பி நிறைந்த இறைச்சி, முட்டை, கொண்டைக்கடலை, வாழைப்பழம், முட்டைகோஸ் ஆகியவையும் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். 

மேலும் எலும்பு ஆரோக்கியத்திற்கும், சரும செல்களின் வளர்ச்சிக்கும் உதவும் வைட்டமின் டி நிறைந்துள்ள மத்தி, சால்மன் மீன்கள், மீன் எண்ணெய், சிவப்பு இறைச்சி, முட்டையின் மஞ்சள் கரு ஆகியவையும், ப்ரீ ரேடிக்கல்களால்  சருமம் பாதிக்கப் படாமல் இருக்க உதவும் வைட்டமின் ஈ நிறைந்த காய்கறிகள், அவகேடோ, சூரியகாந்தி விதைகள், பாதாம், இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் சருமம் வறண்டு போகாமல் தடுக்கலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Reason and Remedies For Dry Skin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->