தங்கத்தில் முதலீடு செய்யப் போறீங்களா.? நமக்கு கிடைக்கக் கூடிய லாபம் என்ன என்பது பற்றி தெரிந்துக் கொள்ளலாம் வாங்க.!
reasons for why you have to invest in gold
தங்கத்தை விரும்பாதவர்கள் யார் தான் இருப்பார்கள். ஆண் பெண் இருபாலர்களும் குழந்தைகள் என அனைவருக்குமே பிடித்தமான ஒரு உலோகம் என்றால் அது தங்கம் தான். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு தங்க ஆபரணங்களை அணிவது என்றால் அலாதியான விருப்பம் தான். தங்கம் ஆபரணம் அழகு என்றாலும் அதையும் தாண்டி ஒரு சிறந்த முதலீடாகும். தற்போது விண்ணை முட்டும் அளவிற்கு தங்கத்தின் விலை உயர்ந்து இருந்தாலும் அதில் முதலீடு செய்வது என்றுமே லாபம் தரக்கூடிய ஒன்று. தங்கத்தில் எவ்வாறு முதலீடு செய்யலாம் என்று பார்ப்போம்.
முதலீடு செய்ய வேண்டும் என்றால் நிலத்தில் காசை முதலீடு செய்ய வேண்டும் அல்லது தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். ஏனென்றால் இந்த இரண்டிலும் முதலீடு செய்தால் லாபம் மட்டுமே நிச்சயம். அத்தகைய தங்கத்தில் எவ்வாறு முதலீடு செய்யலாம் என்று பார்ப்போம்.
தங்கத்தை நகை நாணயங்கள் கட்டிகள் போன்ற வடிவத்தில் கையிருப்பாக வாங்கி வைக்கலாம். மேலும் தங்க முதலீட்டு பத்திரங்கள் வர்த்தக நிதி தங்கப் பரிவர்த்தனை போன்றவற்றின் மூலமாகவும் நாம் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.
நாம் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தவுடன் எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய திட்டமிடல் அவசியமாகும். தங்க முதலீட்டு திட்டங்கள் மற்றும் தங்கத்தை வாங்குவதற்கும் முதலீடு செய்வதற்கும் பல வகைகள் உள்ளன. நாம் நேரடியாக நகை கடைக்கு சென்று தங்க நகைகளாகவோ நாணயங்களாகவோ வாங்கி வைத்துக் கொள்ளலாம் அல்லது ஆன்லைனிலும் முதலீடு செய்யலாம். மேலும் நகை கடைகளில் நடைபெறும் தங்கச்சீட்டுகளிலும் பங்கேற்கலாம்.
தங்கத்தின் விலை குறைந்து இருக்கும்போது அவற்றில் முதலீடு செய்வது ஏற்ற அணுகுமுறையாகும். மேலும் தங்கத்தின் விலை உயரும் போது முதலீடு செய்து வைத்த தங்கத்தை விற்று நல்ல லாபம் பெறலாம். இருந்தாலும் எந்த வகையான முதலீடு நமக்கு ஏற்றது என்பதை பற்றி ஆலோசிக்க வேண்டும்.
ஒரு குடும்பத்தில் 50 பவுன் அதாவது 400 கிராம் அளவிற்கு தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்ததாகும். பணவீக்க விகிதங்கள் வரும்போது இவ்வாறு தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்தது. ஏனென்றால் ஒரு நாட்டின் பொருளாதாரமே தங்கத்தின் அடிப்படையில் தான் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் நமக்கு அவசர காலங்களில் இதனை எளிதாக விற்று காசாக்கி விடலாம் அல்லது வங்கியில் அடமானம் வைத்தும் பணத்தை பெறலாம்.
English Summary
reasons for why you have to invest in gold