சுக்கு மிளகு முட்டைக் குழம்பு செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்.!
recepie of egg kulambu
சுக்கு மிளகு முட்டைக் குழம்பு செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்.!
தினமும் சாம்பார், ரசம், வத்தக் குழம்பு செய்து சாப்பிடுவோருக்கு வித்தியாசமாக ஈசியாக முட்டையை வைத்து சுக்கு மிளகு சேர்த்து குழம்பு செய்து சாப்பிடலாம். இந்த சுக்கு மிளகு, முட்டைக் குழம்பை எவ்வாறு செய்யலாம் என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருள் :-
ஓமம் - ஸ்பூன்
கடுகு - ஸ்பூன்
மிளகு
சுக்கு
முட்டை
நல்லெண்ணெய்
தக்காளி
வெங்காயம்
பூண்டு
செய்முறை :-
முதலில் ஓமம், மிளகு, சுக்கு சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை ஒரு கடாயில் சிறிதளவு தண்ணீர் விட்டு அதில் கலந்து கொதிக்க விட வேன்டும்.
பின்னர் இதனுடன் தக்காளி மற்றும் பூண்டைச் சேர்த்து நன்கு கொதிக்க வேண்டும். பின்னர் அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு தேவையா அளவு முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும்.
முட்டை நன்கு வெந்தவுடன் சிறிதளவு நல்லெண்ணையை ஊற்றி இறக்க வேண்டும். பின்னர் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். இந்த தலைப்பை குழம்பில் கலந்து இறக்கினால் சூடான சுவையான சுக்கு மிளகு முட்டை குழம்பு தயார்.