முகத்தில் முகப்பருக்கள் நீங்கி பளபளப்பாக இருக்க வேண்டுமா.. இந்த ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க..!
Remedy for Pimples cure
நீங்கள் சருமத்திற்கு ஆரோக்கியமான பளபளப்பைக் கொடுக்க உதவும் பல்வேறு பொருட்கள் உங்கள் வீட்டு சமையலறையில் உள்ளன.மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உங்கள் சருமத்திற்கு பொலிவையும், பளபளப்பையும் தருகிறது.
இந்த ஃபேஸ் பேக் முகப்பருவை குணப்படுத்தவும், தோல் செல்களை மீண்டும் உருவாக்கவும், வயதான அறிகுறிகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. ஒரு சிறிய கிண்ணத்தில் அறை ஸ்பூன் தூய மஞ்சள் தூள் சேர்க்கவும். அதில் அறை எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து கொள்ளவும். இதனுடன் ஒரு தேக்கரண்டி சுத்தமான தேன் சேர்க்கவும்.
எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து பேஸ்ட் செய்து, முகம் முழுவதும் மசாஜ் செய்து பத்து நிமிடம் விடவும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். வாரம் இருமுறை இதைத் தொடர்ந்து செய்து வர, உங்கள் முகம் இளமையாகவும், சுருக்கம் குறைந்துவிடும்.
தேன் நமது சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்சரைசர். பப்பாளி, வாழைப்பழம் அல்லது ஆரஞ்சு சாறுடன் தேன் கலந்து ஃபேஸ் பேக் செய்யலாம் அல்லது தேனுடன் சில எலுமிச்சை துளிகள் கலந்து மாய்ஸ்சரைசராக பயன்படுத்தலாம். இதனை தொடர்ந்து செய்து வந்தால் சருமம் பளபளப்பாக இருக்கும்.