சருமம் மற்றும் கூந்தலுக்கு பெரிதும் பயன்படும் ரோஸ் வாட்டரின் நன்மைகள்.! - Seithipunal
Seithipunal


பண்டை காலத்திருந்தே சருமத்தை பாதுகாக்க ரோஸ் வாட்டர் முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது வரும் பெரும்பாலான அழகு சாதன பொருட்களில் ரோஸ் வாட்டர் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. காரணம் இது நல்ல மணத்தையும் தருவது மட்டுமில்லாமல், கூந்தலையும், சருமத்தையும் பாதுகாப்பாகவும் வைக்க உதவுகின்றது. தற்போது வரும் அழகு சாதன பொருட்களில் நல்ல பிளேவர்-க்காக ரோஸ் பயன்படுத்துகிறார்கள். சரி ரோஸ் வாட்டர் பயன்படுத்துவதால் சருமத்திற்கும், கூந்தலுக்கும் கிடைக்கும் நன்மைகளை இங்கு காண்போம்.

ரோஸ் வாட்டரின் நன்மைகள்:

பன்னீர் ரோஸ் வாட்டர் சருமத்தில் PH அளவை சீராக வைக்க உதவுகின்றது.

முகத்தில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், ரோஸ் வாட்டரை தொடர்ந்து தேய்த்து வந்தால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை குறைந்து விடும். சருமம் பளிச்சென்று இருக்கும்.சருமம் சிவந்து போதல், முகப்பரு, அரிப்பு மற்றும் அலர்ஜி போன்ற பல சரும பிரச்சனைகளை தவிர்க்க ரோஸ் வாட்டர் பெரிதளவில் உதவி புரிகின்றது

இந்த வாட்டரை முகத்திற்கு அடிக்கடி பயன்படுத்தி வந்தால் சருமம் ஈரப்பதமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். இதில் உள்ள பாக்டீரியல் எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் உள்ள காயங்கள், வடுக்கள் மற்றும் தழும்புகள் போன்றவற்றை மறைக்க உதவுகின்றது. ரோஸ் வாட்டரில் ஆண்டிஆக்ஸிடண்ட் தன்மை உள்ளதால் சருமத்தில் உள்ள திசுக்கள் மற்றும் செல்களை உறுதியாக வைத்திருக்க உதவுகின்றது. சருமத்தில் உள்ள துளைகளின் ஆழம் வரை சென்று சருமத்தை சுத்தம் செய்வதோடு, சருமத்தை இறுக செய்து ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றது.

மனநிலை மற்றும் உணர்ச்சிகளில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் ரோஸ் வாட்டரில் உள்ள நறுமணம் உங்களை சாந்தப்படுத்த உதவுகின்றது. கூந்தலில் இருக்கும் பொடுகை நீக்க உதவுகின்றது. அதுமட்டுமில்லாமல் கூந்தலுக்கு மிகச்சிறந்த கண்டிஷனராக ரோஸ் வாட்டர் செயல்படுகின்றது. கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கவும் ரோஸ் வாட்டர் உதவுகிறது.

சருமத்தில் இருக்கும் சுருங்கங்களை நீக்கி முகத்தை இளமை தன்மையுடன் வைக்க ரோஸ் வாட்டர் உதவுகின்றது. சருமத்திற்கு நல்ல நறுமணத்தை தருவது மட்டுமில்லாமல் முகத்தை வெண்மையாகவும், பளபளப்பு தன்மையுடன் வைக்க உதவுகின்றது. நீங்கள் பயன்படுத்தும் தலையணைகளில் சிறிதளவு ரோஸ் வாட்டரை தெளித்து விட்டு உறங்கினால் நல்ல நிம்மதியான தூக்கம் உங்களுக்கு கிடைக்கும். இத்தனை நன்மைகள் உள்ள ரோஸ் வாட்டரை இனிமேல் நீங்களும் தினசரி பயன்படுத்தி வாருங்கள், அழகான தோற்றத்துடன் ஜொலியுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rose water preparation for hair and skin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->