கர்ப்பிணிகளுக்கு உகந்த சௌசௌவில் அசத்தலான சட்னி.!
Sau sau Veg Chutney
தேவையான பொருட்கள்;
சௌசௌ- 1,
தக்காளி -1
தேங்காய் துருவல் -அரை கப்
கொத்தமல்லி -ஒரு கைப்பிடி
புளி -அரை லெமன் சைஸ்
தனியா - ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு- ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு -ஒரு ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு
கடுகு - சிறிதளவு.
கருவேப்பிலை - சிறிதளவு,
செய்முறை :
முதலில் சௌசௌவை தோள் நீக்கி விட்டு சிறு சிறு பீசாக வெட்டி மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா சேர்த்து வறுக்கவும். நறுக்கிய தக்காளி, கொத்தமல்லி தழையை, தேங்காய், புளி, தேவையான அளவு உப்பு, சேர்த்து நன்றாக வதக்கவும்.
அனைத்தையும் ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து எடுத்து, எண்ணை ஊற்றி, கடுகு, கருவேப்பிலை, போட்டு தாளித்து எடுத்தால், சுவையான சௌசௌ சட்னி தயார். இது இட்லி தோசை சப்பாத்தி போன்றவற்றுக்கு தொட்டு சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.