முகத்தில் உள்ள கருமையை நீக்கும் 'சந்தனம்' இப்படி ட்ரை பண்ணுங்க!
skin beauty tips
சந்தனத்தால் முகத்தில் ஃபேஸ் பேக் போட்டு போடுவதால் முகத்தில் உள்ள கருமை நீங்கி வெள்ளையாகவும் பொலிவாகவும் மாறும்.
சந்தன பவுடரில் பால் சேர்த்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி நன்கு காய்ந்த பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகள் வெளியேறி முகம் பொலிவுடன் காணப்படும்.
சந்தன பவுடரில் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து பேஸ்ட் போல முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இதனால் சருமம் பளபளப்பாகும்.
சந்தன பவுடர், மஞ்சள் பால் சேர்த்து முகத்தில் தடவி வர முகம் பிரகாசமாக இருக்கும். பருக்கள் உள்ளவர்கள் சந்தன பொடி, வேப்பிலை பொடி, நீர் சேர்த்து பேஸ்ட் போல் முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள பாக்டீரியா, பருக்கள் மறையும்.
சந்தன பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் தடவினால் பிரகாசமாகவும் புத்துணர்ச்சியுடனும் காணப்படும். இதனை தினமும் முகத்தில் போடுவதால் விரைவில் நல்ல மாற்றம் தெரியும்.
சருமத்தில் உள்ள இறந்த செயல்களை வெளியேற்ற சந்தன பொடி, கடலை மாவு, பால் சேர்த்து 20 நிமிடம் முகத்தில் தேய்த்து கழுவ முகம் அழகாகும்.