ஸ்கிப்பிங் விளையாட்டு மட்டுமல்ல இதயத்திற்கும் பலன் தரும்.. எப்படி தெரியுமா..!
Skipping is beneficial for the heart
ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது. இதை 15-25 நிமிடங்களுக்குச் செய்து சிறந்த பலன்களைப் பெறலாம். உடற்பயிற்சியாக இதைத் தொடர்ந்து செய்வது, உடல் பருமனைக் குறைக்க உதவும்.
ஒரு மணி நேரம் ஸ்கிப்பிங் செய்வதன் மூலம் உடலில் உள்ள 1,600 கலோரிகளை எளிதில் எரிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஸ்கிப்பிங் உடற்பயிற்சியானது தொப்பையை மிக எளிதாக குறைக்க உதவுகிறது. ஸ்கிப்பிங் செய்யும் போது இயதத் துடிப்பு சீராகும், இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
இந்தப் பயிற்சியானது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை எளிதில் கரைப்பதோடு, செரிமானத்திற்கும், உடலை விரைவாக நகர்த்துவதற்கும் மிகவும் உதவியாக இருக்கும். இந்தப் பயிற்சியின் மூலம் எலும்புகளை வலுவாக்குகிறது.
English Summary
Skipping is beneficial for the heart