விண்வெளியில் முதல் சாதனைகள் ஓர் தொகுப்பு.! - Seithipunal
Seithipunal


விண்வெளி... முதல் சாதனைகள்:

விண்வெளியில் முதல் மனிதர் (ஏப்ரல் 12ஆம் தேதி, 1961ஆம் ஆண்டு):

சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த விண்வெளி வீரர் யூரி ககாரின் 'வோஸ்டாக் 1" என்ற விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்கு சென்றார். 108 நிமிடங்கள் விண்வெளியில் இருந்த இவர் புவியை ஒரு முறை சுற்றி வந்தார். 

விண்வெளியில் இருந்தபடி, 'நான் புவியைக் காண்கிறேன். அது மிகவும் அழகாக இருக்கிறது" என்று அவர் கூறியதுதான் விண்வெளியில் உச்சரிக்கப்பட்ட முதல் வாக்கியம்.

விண்வெளியில் முதல் அமெரிக்கர் (மே 5ஆம் தேதி, 1961ஆம் ஆண்டு): 

நாசாவின் மெர்குரி திட்டத்தின்கீழ் 'ஃபிரீடம் 7" விண்கலத்தில் விண்வெளியை அடைந்தார் ஆலன் பி.ஷெப்பர்ட். இவர் 15 நிமிடங்கள் விண்வெளியில் இருந்தார்.

விண்வெளியில் முதல் பெண் (ஜூன் 16ஆம் தேதி, 1963ஆம் ஆண்டு): 

'வோஸ்டாக் 6" விண்கலத்தின் மூலம் சோவியத் விண்வெளி வீராங்கனை வாலண்டினா தெரஸ்கோவா விண்வெளிக்கு சென்றார். 70 மணி நேரம் 50 நிமிடங்கள் விண்வெளியில் தங்கிய இவர், 45 முறை புவியை சுற்றி வந்தார்.

விண்வெளியில் நடந்த முதல் மனிதர் (மார்ச் 18ஆம் தேதி, 1965ஆம் ஆண்டு):

சோவியத்தின் அலெக்ஸி லியோனவ் விண்வெளியில் பயணித்திருக்கையில் விண்வெளி ஓடத்திலிருந்து வெளிவந்து 12 நிமிடங்கள் இருந்ததன் மூலம் விண்வெளியில் நடந்த முதல் மனிதன் என்ற பெருமையை பெற்றார்.

விண்வெளியில் முதல் இந்தியர் (ஏப்ரல் 2ஆம் தேதி, 1984ஆம் ஆண்டு):

இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் ராகேஷ் ஷர்மா சோவியத் விண்கலம் ஒன்றில் விண்வெளியை அடைந்து புவியை சுற்றி வந்தார். இவர் எட்டு நாட்கள் 'சால்யுட் 7" விண்வெளி நிலையத்தில் தங்கினார்.

விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியப் பெண் (நவம்பர் 19ஆம் தேதி, 1997ஆம் ஆண்டு):

இந்தியாவில் பிறந்து அமெரிக்காவின் நாசாவில் பணியாற்றிய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா. புவிக்கு திரும்பக்கூடிய கொலம்பியா விண்கலத்தில் விண்வெளிக்கு பயணித்தார். விண்வெளி சென்ற முதல் இந்தியப் பெண் இவர்தான்.

விண்வெளிக்கு சென்ற மிக மூத்த மனிதர் (அக்டோபர் 29ஆம் தேதி, 1998ஆம் ஆண்டு):

நாசாவின் 'டிஸ்கவரி" விண்கலத்தில் பயணித்த அமெரிக்க விண்வெளி வீரர் ஜான் கிளென் விண்வெளிக்கு சென்ற மிக முதிய மனிதர் ஆவார். அப்போது அவருக்கு வயது 77 ஆகும். 

முதல் விண்வெளிப் பயணி (ஏப்ரல் 28ஆம் தேதி, 2001ஆம் ஆண்டு):

ரஷ்யா, சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பிய ராக்கெட்டில் 2 கோடி டாலர் பணம் செலுத்திப் பயணித்தார் அமெரிக்கத் தொழிலதிபர் டென்னிஸ் டிடொ. பணம் கொடுத்து விண்வெளிக்கு சென்றதால் இவர் முதல் விண்வெளிப் பயணி என்று அறியப்படுகிறார்.

நிலவில் நடந்த முதல் மனிதர்கள் (ஜூலை 20ஆம் தேதி, 1969ஆம் ஆண்டு):

அப்போலோ விண்வெளி வீரர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின் (ஜூனியர்) இருவரும் நிலவில் கால்பதித்து நடந்த முதல் மனிதர்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Space achievement special part 1


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->