கோடி நட்சத்திரங்கள் இருக்கும்போது, விண்வெளி ஏன் இருட்டாக இருக்கிறது?
Space dark
கோடி நட்சத்திரங்கள் விண்வெளியில் இருக்கும்போது, விண்வெளி வெளிச்சமாக தானே இருக்க வேண்டும்? ஏன் விண்வெளி கருப்பாக இருக்கிறது? என்று நமக்கு புரியாத புதிராக இருக்கலாம்.
மேலும் பரந்து விரியும் பேரண்டத்தில் நம் சூரியனைப் போன்ற, சூரியனை விடப் பெரிய நட்சத்திரங்கள் கூட ஏராளம் உண்டு. ஒற்றைச் சூரியனால் நம் பூமியின் ஒரு பகுதியில் பகலாகவும், வானம் பளீர் வெளிச்சத்துடன் நீல நிறமாகவும் தெரிகின்றது. அவ்வளவு கோடி நட்சத்திரங்கள் விண்வெளியில் இருக்கும்போது, விண்வெளி வெளிச்சமாக தானே இருக்க வேண்டும்? ஏன் இருட்டாக இருக்கின்றது? வாங்க பார்க்கலாம்.
எதற்காக கருப்பாக தெரிகிறது?
நிறங்கள் ஒன்றோடொன்று கலந்த கலவை ஆகும். வானவில்லின் ஒரு முனையில் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம் இருக்கும். பின்பு மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம் மற்றும் ஊதா என்று படிப்படியாக தெரியும்.
நிறங்கள் வௌ;வேறு அலைநீளங்களையும், அதிர்வெண்களையும் மற்றும் ஆற்றல்களையும் கொண்டவை. அதில் ஊதா நிறமானது குறுகிய அலைநீளம் மற்றும் அதிக அதிர்வெண் மற்றும் ஆற்றலை கொண்டிருக்கும். மேலும் சிவப்பு நிறம் நீண்ட அலைநீளம், குறைந்த அலைவரிசை மற்றும் ஆற்றலை கொண்டிருக்கும்.
இதனால் தான் நாம் விண்வெளியில் இருந்தால் வானத்தின் நிறம் நீலத்திற்கு பதிலாக கருப்பாக தெரிகிறது. மேலும் விண்வெளியில் எந்தவிதமான வளிமண்டலப் பொருட்களும் இல்லை. இதனால் ஒளிச்சிதறல் கிடையாது. ஆகவே விண்வெளியில் இருந்தால் வானத்தின் நிறம் கருப்பாக தான் தெரியும்.
மற்றொரு காரணம் :
மற்றொரு காரணம் என்னவென்றால், வானத்தில் இருக்கும் நட்சத்திரத்தின் எண்ணிக்கையை விட நம் அண்டம் மிகவும் பெரியது. பிரபஞ்சத்தில் வெளிச்சத்தைப் பாய்ச்சும் அளவிற்கு இங்கே நட்சத்திரங்கள் இல்லை.
மேலும் தொலை தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் வெளியிட்ட ஒளி நம்மை அடைந்தால் மட்டுமே அப்படி ஒரு நட்சத்திரம் இருக்கின்றதே நமக்குத் தெரிய வரும். அந்த ஒளி நம்மை வந்தடையும் கால அவகாசத்தை தீர்மானிப்பது நமக்கும் அந்த நட்சத்திரத்திற்கும் இருக்கும் இடைவெளி தான்.
பல நட்சத்திரங்கள் தன் ஒளியை இழந்ததால், அது நம் கண்ணிற்கு தற்போது தெரியாமல் இருக்கலாம்.
இருள் இருந்தால்தானே, நாம் ஒளியை ரசிக்க முடியும்... பேரண்டத்தின் இருட்டுதான் நம்மை நட்சத்திரங்களின் அழகை ரசிக்க வைக்கிறது. இதனால் தான் விண்வெளி கருப்பு நிறத்தில் தெரிகிறது.