டக்கு டக்குன்னு அழுதுடுவீங்களா? இது உங்களுக்கு தான்.!
Suddenly crying Peoples should know This
சில நேரங்களில் மனம் விட்டு அழுவது நமக்கு ஆறுதலை கொடுக்கும். அப்போது அழுகை நமக்கு வரமாகும். பல நேரங்களில் காரணம் இல்லாமல் நாம் அழும் போது அது நமக்கு மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வை கொடுக்கும் அப்போது அழுகை ஒரு சாபம்.
1980களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி பெண்கள் மாதத்திற்கு ஐந்து நாட்களும் ஆண்கள் மாதத்திற்கு ஒன்றரை நாட்கள் வீதம் சராசரியாக அழுவதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அழுகையை நிறுத்தி நமது மனதை உற்சாகமாகவும், சந்தோசமாகவும் வைத்துக் கொள்ளும் சில வழிகளை இங்கு காண்போம்.
எப்போது அழுகை எண்ணம் மேலோங்குகிறதோ? அப்போது உங்களுக்கு மிகவும் பிடித்த சிறு விஷயங்களில் ஈடுபடுங்கள். அது உங்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் தோன்ற உதவியாக இருக்கும்.
மூச்சுப் பயிற்சி நம் அழும் எண்ணங்களை மாற்றுவதற்குரிய ஒரு சிறந்த வழியாகும். ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி மனதை அமைதிப்படுத்தி நம் உணர்ச்சி ஓட்டங்களை நேர்மறையாக மாற்ற உதவும். மேலும் மூச்சுப் பயிற்சியின் மூலம் நம் உணர்வுகளை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றலும் நமக்கு வளரும்.
உணர்ச்சிகரமான அழுகை நரம்பு மண்டலத்தை பாதிக்க கூடிய ஒன்று. க்ளோடிஸ் எனப்படும் தொண்டையின் பின்புறத்தில் உள்ள தசைகளைத் திறப்பதன் மூலம் இவை எதிர்வினை ஆற்றுவதற்கான வழி வகுக்கலாம். தேநீர் மற்றும் காபி போன்ற பானங்களை குடிப்பதன் மூலம் அவற்றில் இருக்கக்கூடிய வேதிப்பொருட்கள் நம் உடலின் உற்சாகத்தை தூண்டி ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி மனச்சோறு நீங்கி மனம் புத்துணருடன் இருக்க உதவும்.
விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றில் நம் கவனத்தை செலுத்துவதன் மூலம் நமக்குள் இருக்கும் எதிர்மறையான எண்ணங்கள் மறைந்து நேர்மறையான எண்ணங்களும் சிந்தனைகளும் அதிகரிப்பதோடு மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வு கிடைக்கும்.
அழுகை எண்ணம் மேலோங்கும் வேலைகளில் உங்கள் மனதிற்கு பிடித்த ஒரு விஷயத்தில் உங்கள் கவனத்தை செலுத்துவதன் மூலம் நம் மனதிற்கு உற்சாகம் கிடைக்கும். மேலும் எப்போதும் நேர்மறையான சிந்தனைகள் மற்றும் ஆரோக்கியமான சிந்தனைகள் அதிகரிப்பதற்கான செயல்களில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
English Summary
Suddenly crying Peoples should know This