தென்காசி பேமஸ் கார சீடை.!
தென்காசி பேமஸ் கார சீடை.!
நாம் நமது வாழ்நாளில் எத்தனையோ விதமான காரவகைகளை சாப்பிட்டிருப்போம். ஆனால் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விற்கப்படும் சீடைகளை சாப்பிட்டால் அதன் சுவையை மறக்காமல் எப்போது தென்காசிக்கு சென்று அந்த சீடையை சாப்பிடுவோம் என்று நினைத்துக்கொண்டே இருப்போம்.
இந்த சீடையானது தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிடைக்கும். தென்காசியில் உள்ள பழைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து உள்ளூர் மினிபஸ் சேவைக்காக செல்லும் வழியில்., இந்த வியாபாரமானது நடைபெற்று வருகிறது.
அந்த சுவை மிகுந்த சீடையை எவ்வாறு செய்வது என்று இந்த பகுதியில் பார்ப்போம்...
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 1 கிலோ.,
எள்ளு - 200 கிராம்.,
உப்பு - தேவையான அளவு.,
செய்யும்முறை:
முதலில் புழுங்கல் அரிசியை ஊறவைத்து அதனை மையாக அரைத்து கொள்ளவும்., மற்றும் எள்ளை மிதமான சூட்டில் வறுத்து கொள்ளவும்.
பின்னர் அந்த புழுங்கல் அரிசி மாவில் எடுத்துக்கொண்ட எள்ளை தூவிவிட்டு., தேவையான அளவு உப்பை சேர்த்துக்கொண்டு மாவுடன் நன்றாக கலக்கும் படி பிசையவும்.
பின்னர் அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.
உருண்டைகள் அனைத்தும் தயாரானவுடன் வானெலியில் எண்ணையை ஊற்றி பொன்னிறமாக மாறும் வரை காத்திருந்து பின்னர் வறுத்தெடுக்கவும்.
சுவையான தென்காசி கார சீடை ரெடி.......
English Summary
TENKASI SPECIAL KARA SEEDAI MAKING