தாளிப்பு வடகம் : இதை ஃபாலோவ் பண்ணி, நீங்களும் ஈசியாக செய்யலாம்.!
thaalippu vadagam preparation in tamil
தேவையான பொருட்கள் :
சின்ன வெங்காயம்- 1 kg
மஞ்சள் தூள்- 3 ஸ்பூன்
கல் உப்பு - 3 ஸ்பூன்
பூண்டு - 2 கட்டி
கருவேப்பிலை - ஒரு கைப்பிடி
வெந்தயம் - 2ஸ்பூன்
சோம்பு -3 ஸ்பூன்
கடுகு -50 கிராம்
சீரகம் -50 கிராம்
உளுந்து-50 கிராம்
பெருங்காயத்தூள்- ஒரு ஸ்பூன்
சுத்தமான விளக்கெண்ணெய் - 200 மிலி
கடலை எண்ணெய்- 3 ஸ்பூன்

செய்முறை :
முதலில் சின்ன வெங்காயத்தை தோலை உரித்து விட்டு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த வெங்காயத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து நன்றாக பிசைந்து, ஒரு நாள் வெயிலில் காய வைக்கவும்.
பின் இரவு ஒரு அகலமான பாத்திரத்தில் காய வைத்த வெங்காயத்தை போட்டு அதனுடன் கடுகு, சோம்பு, சின்ன சீரகம், உளுந்து, வெந்தயம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, இடித்த பூண்டு, விளக்கெண்ணெய், கடலை எண்ணெய், அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து இரவு முழுவதும் மூடி வைத்து விடவும்.
காலையில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் நன்றாக காய விடவும். பத்து அல்லது பதினைந்து நாட்கள் தொடர்ந்து காயவைத்து எடுத்தால் சூப்பரான வடகம் தயார். இந்த வடகம் சட்னி, சாம்பார், கார குழம்பு, புளிக்குழம்பு, லெமன் சாதம், தயிர் சாதம், போன்றவற்றிற்கு பயன்படுத்தி தாளித்தால் மனமும் சுவையும் அருமையாக இருக்கும்.
English Summary
thaalippu vadagam preparation in tamil