தலையில் பீரோ விழுந்து பெண் இறந்ததாக கூறிய பெற்றோர்; ஆணவ கொலை என காதலன் புகார்..! - Seithipunal
Seithipunal


கடந்த மார்ச் 30-ந் தேதிதிருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் என்ற கிராமத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த வித்யா என்ற பெண் தலையில் பீரோ விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்டது.

தலையில், பீரோ விழுந்ததாக கூறி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மருத்துவர்கள் அவரை சோதித்து பார்த்ததில் இறந்து விட்டதாக கூறினர். ஆனால், இதனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அந்த பெண்ணை உறவினர்களே அடக்கம் செய்துள்ளனர்.

இந்நிலையில், இது ஆணவ கொலையாக இருக்கலாம் என அந்த பெண்ணின் காதலன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மரணமடைந்த வித்யா என்ற பெண்ணும் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி என்ற இளைஞரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இளைஞர் பெண் கேட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். வெவ்வேறு ஜாதி மற்றும் தனிப்பட்ட காரணங்களால் திருமணம் முடித்து கொடுக்க பெண் வீட்டார் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக, பெண் வீட்டில் அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இந்த நிலையில், கடந்த ஞாயிறு அன்று அந்த பெண் மர்மமான முறையில் இறந்துள்ளார். காதல் விவகாரம் தொடர்பாக பிரச்சனை இருந்த நிலையில் காதலி பலியானதால் காதலனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல் நிலையத்தில் பெண்ணின் காதலன் புகார் செய்துள்ளார். 

புகாரின் பேரில் ஆணவக்கொலையா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Parents say girl died after desk fell on her head My boyfriend files a complaint of honor killing


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->