நாளை இந்தியாவுக்கு 100 சதவீத பரஸ்பர வரியை அறிவிக்கிறார் டிரம்ப்; இந்தியா ஆபத்துகளை சந்திக்கும்; எச்சரிக்கும் வல்லுநர்கள்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றத்தில் இருந்து டிரம்ப் அதியடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் ஒன்று வரி விதிப்பு. அந்தவகையில் ட்ரம்ப் கனடா, மெக்சிகோ, நாடுகளுக்கு 25 சதவீத கூடுதல் வரியும், சீனாவுக்கு 10 சதவீத கூடுதல் வரியும் விதித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில்,  இந்தியா உள்பட அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதிக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ள நிலையில், இது தொடர்பான அறிவிப்பை அமெரிக்க விடுதலை நாளான நாளை 02-ஆம் தேதி அவர் அறிவிக்க உள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியுள்ளதாவது; அதாவது பரஸ்பர வரிகளில் எந்த விலக்குகளும் இருக்காது என்றும், பரஸ்பர வரி கட்டண விவரத்தை அறிவிக்க டிரம்ப் தயராகி வருகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இதனை செயல்படுத்துவதில் டிரம்ப் உறுதியாக இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் மற்ற நாடுகள் அமெரிக்க தயாரிப்பு பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி விவர பட்டியலையும் அவர் வெளியிடுவார் என்று தெரிவித்துள்ளார்.  அந்தவகையில், இந்தியாவின் விவசாய பொருட்கள் மீது 100 சதவீதம் வரை வரிகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவின் 100 சதவீதம் வரி விதிப்பால் இரசாயனங்கள் துறை , உலோக பொருட்கள் துறை, நகைகள் துறை, மேலும் ஆட்டோமொபைல்கள் துறை , மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் துறை ஆகியவை பல மடங்கு விலை அதிகரிக்க கூடும் என்று ஆய்வுகளில் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த பரஸ்பர வரிகளை விதிக்கும் டொனால்ட் டிரம்பின் திட்டத்தால் இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள்தான் அதிக ஆபத்துகளை சந்திக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எதிர்வு கூறியுள்ளனர். இதனிடையே வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் கூறுகையில், இந்தியா அமெரிக்கா மீது விதிக்கும் பரஸ்பர வரிகளை கணிசமாக குறைப்பதாக கேள்விப்பட்டேன் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trump to announce 100 percent reciprocal tax on India tomorrow India will face dangers Experts warn


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->