சிறுநீரகத்தை பாதுகாக்கும் முலாம்பழம்.! இவ்வளவு நன்மைகளா.?
there are so many benefits in musk melon we eat in summer
கோடை காலம் தொடங்கிவிட்டது சுட்டெரிக்கும் வெயில் நம்மை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் நாம் கொஞ்ச தூரம் வெளியில் சென்று வந்தாலே உடலுக்கு நீரிழப்பு ஏற்பட்டு மிகவும் சோர்வாக உணர்கிறோம். இதற்கு தண்ணீர் மட்டும் குடித்தால் பத்தாது தர்பூசணி, முலாம்பழம் போன்ற நீரேற்றம் அதிகம் கொண்ட பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். முலாம்பழத்தில் அதன் பழங்கள் முதல் விதைகள் வரை நம் உடலுக்கு நன்மை பயக்கக் கூடியதாக இருக்கிறது.
முலாம்பழத்தில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையுடன் செயல்பட உதவுகிறது. இதன் காரணமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
முலாம் பழத்தில் ஏராளமான சைலோகைன்கள் உள்ளன. இவை நம் சிறுநீரகங்களின் செயல்பாடுகள் மேம்பட உதவுகிறது. மேலும் இவை சிறுநீரக கற்களை தடுக்கவும் உதவுகின்றன.
முலாம்பழத்தில் ஏராளமான நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இவை நமது குடலின் இயக்கத்தை சீராக வைத்திருப்பதோடு உடலின் வளர்ச்சியை மாற்றத்திற்கும் முக்கிய பங்கு வைக்கிறது. இதன் காரணமாக மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
முலாம் பழம் நமது உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகளை அளிப்பதை போன்று அவற்றின் விதைகளும் நம் சார்பு ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வைக்கின்றன. அவற்றின் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கையான பேஸ்டின் மூலம் சரும வறட்சி மற்றும் முகப்பரு போன்ற பிரச்சினைகளிலிருந்து சருமத்தை பாதுகாத்துக் கொள்ளலாம்.
English Summary
there are so many benefits in musk melon we eat in summer