மாடி தோட்டத்தில் தக்காளி செடி வளர்க்கிறீர்களா? அப்ப உங்களுக்கு தான் இந்த டிப்ஸ் ! - Seithipunal
Seithipunal


வீட்டில் நாம் முதலில் ஒரு செடி வளர்க்க போகிறோம் என்றால் அது தக்காளியாகத்தான் இருக்கும். மாறிவரும் காலகட்டங்களில் மக்களின் நிலப்பகுதி சுருங்கி அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்ந்தாலும்  மாடித்தோட்டம் மற்றும் பால்கனியில்  கண்டைனர்களிலும், தொட்டிகளிலும், குரோ பேக்களிலும்,  தற்போது செடிகளை வளர்க்கத் தொடங்கி விட்டனர். நம் வீட்டு மாடி தோட்டத்தில் தொட்டியில் எவ்வாறு தக்காளியை வளர்க்கலாம் என்று பார்ப்போம்.

தக்காளியை பொறுத்தவரை சின்ன செடி கிடையாது 3 முதல் 12 அடிவரை வளரக்கூடியது. சில ரகங்கள் 65 அடி உயரம் வரை வளரும் எனவே நாம் வீட்டு மாடியில் தொட்டியில் தக்காளி வளர்க்கும் போது அதிக உயரமாக வளர்ந்து சென்றால் அவற்றை பராமரிப்பது மிகவும் கடினம். எனவே சிறிய ரக தக்காளிகளை வளர்த்து கொள்ள வேண்டும்.

ஒரு சிறிய தொட்டியில் கூட தக்காளி செடி வளரும் ஆனால் நாம் எதிர்பார்த்த மகசூலை எடுக்க முடியாது. தக்காளி உயரமாக வளரக்கூடியது அதனால் அதற்கு ஏற்றவாறு குரோ பேக்குகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். சிறிய ரகங்களை தேர்ந்தெடுக்கும் போது 10-15  கேலன் அளவுடைய கிராக்குகளை பயன்படுத்த வேண்டும்.

நமது தக்காளி செடியின் வளர்ச்சியை நிர்ணயிப்பது மண் கலவை தான். எனவே குரோபேக்குகளில் தக்காளி வளர்க்கும் போது சரியான மண் கலவையை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் நாம் தண்ணீர் ஊற்றும் போது சத்துக்கள் அனைத்தும் நீருடன் அடித்துச் செல்லப்பட்டு விடும்.
செம்மண் + கோகோபிட் + மண்புழுரம் 1:1:1 என்ற அளவில் பயன்படுத்தலாம்.

நீங்கள் நாட்டுரக தக்காளியை வாங்கி நடும்போது அதனை உடனே நட்டு விட வேண்டும். இல்லையென்றால் செடி  பலகீனமடைந்துவிடும். தக்காளி நன்றாக கிளை விட்டு வளரக்கூடியது. இதன் காரணமாக இரண்டு கிளைகளை மட்டும் விட்டுவிட்டு மற்றவற்றை நீக்கிவிடலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tips for growing tomato plant in terrace garden


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->