மிகவும் உணர்ச்சி வசப்படும் குழந்தைகளை எப்படி கையாள வேண்டும் தெரியுமா?! - Seithipunal
Seithipunal



பொதுவாகவே குழந்தைகள் என்றால் அழுவார்கள். ஆனால் காரணமே இல்லாமலோ, அல்லது மிக மிக சிறிய விஷயத்திற்கோ கூட சில குழந்தைகள் அழும். அப்படிப்பட்ட குழந்தைகள் மிக அதிக உணர்திறன் (Highly Sensitive) உடையவர்கள்  என்று அர்த்தம். இந்த மாதிரியான குழந்தைகளை வளர்ப்பதற்கு புரிதலும், பொறுமையும் மிக அவசியம். உணர்திறன் கூடிய குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்வோம். 

இந்த மாதிரியான அதிக உணர்திறன் கொண்ட குழந்தைகளின் நரம்பு மண்டலம் அதிக உணர்திறன் கூடியதாக இருக்கும். இப்படிப்பட்ட குழந்தைகள் எல்லாவற்றையும் மிக ஆழமாக சிந்திக்க கூடியவர்களாக இருப்பார்கள். சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். சிலநேரங்களில் பிடிவாதமாக இருக்கும் இவர்கள், அமைதியானவர்கள். 

நீங்கள் செய்ய வேண்டியது :

* இந்த குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அவர்களைத் தனியாக விட வேண்டும். அவர்களை அவர்களே சமாதானம் செய்து கொள்வார்கள். 

* செல்லப் பிராணிகளை வாங்கி கொடுக்கலாம். இவை குழந்தையின் மனநிலையை அமைதியாக இருக்க வைக்கும். 

* குழந்தைகளுக்கு எந்த கடுமையான தண்டனையும் கொடுக்க கூடாது. சத்தம் போடவோ, அடிக்கவோ கூடாது. 

* உங்கள் குழந்தை அழுதால், முதலில் நீங்கள் அவர்களை சகஜமாக்கும்படி பேசுங்கள். மிக எளிதான கேள்விகளைக் கேட்டு சிறிது நம்பிக்கை கொடுங்கள். 

* அதிக உணர்திறன் கொண்ட குழந்தைகளை மாற்றுவது இயலாத காரியம். அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் அவர்களது வளர்ச்சியில் மோசமான பாதிப்பு ஏற்படும். 

* அவர்கள் எப்போதெல்லாம் கவலையாக இருப்பது போல் தெரிகிறதோ, அப்போதெல்லாம் அவர்களை அன்பாக, மென்மையாக அணைக்கலாம். இது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை அளிக்கும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tips To Parents That How Should Handle Highly Sensitive Kids


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->