இறுக்கமான ஜீன்ஸ் மற்றும் ஹை ஹீல்ஸ் அணியும் நவநாகரீகப் பெண்ணா நீங்க.?! அப்போ அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் தெரிஞ்சுக்கோங்க..!! - Seithipunal
Seithipunal


இன்றைய இயந்திரத் தனமான காலத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறக்கின்றனர். மேலும் ஆண்களை போலவே உடை அலங்காரங்களையும் பெண்கள் மாற்றிக் கொள்கின்றனர். அந்த வகையில் முதல் இடத்தில் இருப்பது ஜீன்ஸ் அணிவது. முன்பெல்லாம் ஆண்கள் மட்டுமே அணிந்து வந்த ஜீன்ஸை தற்போது பெண்களும் அணிகின்றனர். ஆனால் அதனால் இருபாலருக்குமே ஏராளமான கெடுதல்கள் ஏற்படுகின்றன என்றால் நம்ப முடிகிறதா?

இறுக்கமான ஜீன்ஸ் : 

உடலோடு ஒட்டி இறுக்கமாக இருக்கும் ஜீன்ஸ்களைத் தான் இன்றைய நவ நாகரீக இளைஞர்கள் விரும்புகிறார்கள். இப்படி அணியும் இறுக்கமான ஜீன்ஸ்கள் உடலுக்கு ஒரு அழகிய வடிவத்தை தருவதாக நினைக்கிறார்கள். அது உண்மை தான். ஆனால் அப்படி இறுக்கமாக அணியும் ஜீன்ஸ் அடிவயிற்றுப் பகுதியில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும் செரிமான அமைப்பை பாதிப்பதோடு மலச்சிக்கல் பிரச்சினையை ஏற்படுத்தும். உடலின் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதோடு நரம்புகளின் செயல்பாடும் பாதிக்கப் படுகிறது. இதனால் ஒற்றைத் தலைவலி பிரச்சினை ஏற்பட வாய்ப்பு அதிகம். 

 

ஹை ஹீல்ஸ் அணிவது :

முன்பெல்லாம் உயரம் குறைவாக இருப்பவர்கள் மட்டுமே அணிந்து வந்த ஹை ஹீல்ஸ்கள் இப்போது ட்ரெண்டி பேஷன் ஆகிவிட்டது. ஆனால் எப்போதும் இப்படி ஹை ஹீல்சுடன் திரிவது முதுகு வலி, கால் வலி உள்ளிட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும். இறுதியில் இவை தீர்க்கவே முடியாத பிரச்சினையாக மாறி விடும் அபாயம் உண்டு. ஹை ஹீல்ஸ் அணிவதால் கணுக்கால், குதி கால், முழங்கால் ஆகியவற்றில் அதிக அழுத்தம் ஏற்பட்டு, இவை அனைத்தும் பாதத்தின் முன் பகுதியில் வந்து முடிகிறது. இவை நாளடைவில் ஆபத்தான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trendy Fashions Which Affects Your Health


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->