ஓஹோ...வாழை இலையில் அறுசுவை உணவு சாப்பிட இவ்வளவு ரூல்ஸ் இருக்கா.! தெரிஞ்சிக்கலாம் வாங்க.! - Seithipunal
Seithipunal


பசிக்கு உணவு சாப்பிட்ட காலம் மாறி தற்போது நாவின் ருசிக்கும் பொழுது போக்கிற்கும் உணவை சாப்பிடக்கூடிய காலம் நடந்து கொண்டிருக்கிறது. பணத்தை தேடி எந்நேரமும் உழைத்துக்கொண்டே இருக்கும் மனிதன் கையில் கிடைத்ததை சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறான். இதனால் பல்வேறு விதமான நோய் தாக்குதல்களுக்கும் நமது உடலானது உள்ளாகிறது. இதனைத் தவிர்க்க நமது பண்டைய அறுசுவை உணவு முறைகளே சிறந்த வழி என சாஸ்திரங்கள் கூறுகின்றன. இலைகளில் பரிமாறப்படும் அறுசுவை உணவுகளை எவ்வாறு உண்ணலாம் என்று பார்ப்போம்.

அறுசுவை உணவை உண்ண வேண்டும் அது எப்போது உண்ண வேண்டும் எப்படி உண்ண வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது அதன்படி உணவருந்தினால்  நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

அறுசுவை என்பது துவர்ப்பு, இனிப்பு,  புளிப்பு, கார்ப்பு, கசப்பு, உவர்ப்பு,  ஆகிய ஆறு சுவைகளை குறிக்கிறது. இந்த ஆறு சுவைகளும் நம் உடலில் இருக்கக்கூடிய ஆறு முக்கியமான உறுப்புகளுக்கு  உதவி புரிகின்றன.

துவர்ப்பு ரத்தத்தை பெருக்குகிறது. இனிப்பு சுவை தசைகளை வளர்க்கிறது  புளிப்பு சுவை கொழுப்புச்சத்தை வளர்க்கிறது. கார்ப்பு எலும்பை உறுதியாககிறது. கசப்பு சுவை நரம்புகளை வலுப்படுத்துகிறது. உவர்ப்பு உமிழ்நீரை சுரக்கச் செய்கிறது. இந்த ஆறு சுவைகளும் நம் உடலின் முக்கியமான இயக்கத்திற்கு காரணமாக இருக்கின்றன.

இலையில் உணவு பரிமாறப்பட்டதும்  உடனே சாப்பிடக்கூடாது. அனைத்து உணவுகளும் பரிமாறப்பட்ட பின்னரே சாப்பிட வேண்டும். அதிலும் முதலில் இனிப்பை தான் சாப்பிட வேண்டும் அதன் பிறகு புளிப்பு, உவர்ப்பு, காரம், கசப்பு  இப்படி ஆறு சுவைகளையும் உண்ட பின் இறுதியாக தயிரில் உப்பு கலந்து சாப்பிட வேண்டும். இது செரிமானத்திற்கு சிறப்பாக இருப்பதோடு உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஆரோக்கியத்தை தருகிறது.


இவ்வாறு உணவை உண்பதன் மூலம் உடம்பில் இருக்கும் பஞ்சபூதங்களும் சமநிலை பெறுகின்றன. இறுதியாக தயிரில் உப்பு கலந்து சாப்பிடும் போது பித்தம், கபம், வாதம் என்ற மூன்று ஆபத்தான காரணிகள் சமநிலை செய்யப்படுகின்றன. சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் நேரங்களில் உணவு அருந்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் நின்று கொண்டு ஒருபோதும் சாப்பிடக்கூடாது. இவை அறுசுவை உணவுகளை உண்ணும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ways to eat delicious food


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->