நம் வாழ்வில் செய்ய கூடாதவை என்னென்ன ?
what dont do in life
வீட்டில் நாம் செய்யும் ஒரு சில தவறுகளால் கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் எச்சரிக்கையாக கூறப்பட்டுள்ளது. அவை என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்
* காலையில் எழுந்தவுடன் குளிக்கும் போது தண்ணீர் அங்கும் எங்கும் அலை மோதாமல் குளிக்க வேண்டும். அப்படி அலைமோதினால் அன்றைய நாள் நாமும் அங்கும் இங்குமாக அலைய வேண்டியது வரும்.
* இரவில் தூங்கும் போது தலைக்கு வைக்கும் தலையணையை காலில் வைத்து படுக்கக் கூடாது. தலையணை மீது ஏறி அமர்வது துரதிஷ்டமாக கருதப்படுகிறது.
* பொதுவாக சாப்பிட உட்காரும்போது நிழல் நமக்கு முன் பக்கமாக விழும்படி உட்காரக் கூடாது. இதனால், வீட்டில் கஷ்டம் ஏற்படும். சாப்பிடும்போது ஐந்து விரல்களில் ஒரு விரலை நீட்டியும், சாப்பாடு கீழே விழும்படி கையை உதறியும் சாப்பிடுவது நல்லதல்ல.
*வாய் கொப்பளிக்கும் போது, எச்சில் துப்பும்போது வலது பக்கம் துப்ப கூடாது.
சோறு, உப்பு, நெய் போன்றவற்றை கையால் பரிமாறுவது கூடாது.
* வெங்காயம், இஞ்சி, கட்டி தயிர், பாகற்காய் போன்றவற்றை இரவில் உண்ணக்கூடாது.
இரு கைகளையும் சேர்த்து தண்ணீர் குடிக்க கூடாது. இப்படி மேலே உள்ள முறைகளை பின்பற்றுவதன் மூலம் வாழ்வில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு சகல நன்மைகளும் உண்டாகும்.