விண்வெளி குப்பைகள் என்றால் என்ன? வாங்க பார்க்கலாம்.! - Seithipunal
Seithipunal


விண்வெளி குப்பைகள் என்றால் என்ன

அம்மாக்கள் நமக்கு நமது சிறுவயதில் சோறு ஊட்டுவதற்காக நிலாவில் பாட்டி வடை சுட்ட கதை, விண்வெளி பூச்சிக்காரன் கதை கூறி ஏமாற்றியதுண்டு. அந்தப் பாட்டி வடை சுட்ட விண்வெளி தற்போது குப்பைகள் நிறைந்த இடமாக இருக்கின்றது என்றால் நம்ப முடிகிறதா? ஆம்.. 

ஆனால் அதற்கு காரணம் வடை சுடும் பாட்டி அல்ல. விண்வெளியில் பல உலக நாடுகளால் ஏவப்படும் ராக்கெட்டுகளால் தான். விண்ணில் செலுத்தப்பட்டு, ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டவுடன் அவை அப்புறப் படுத்தப்படுவதில்லை. அவற்றின் எண்ணிக்கை தற்போது உயர்ந்து பெரும் ஆபத்தாகவும் உள்ளது. 

அந்த வகையில் விண்வெளி குப்பைகள் என்றால் என்ன? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதை பற்றி இப்பகுதியில் பார்க்கலாம். 

விண்வெளி குப்பைகள் :

உடைந்த செயற்கைக்கோள்கள், வெற்று ராக்கெட்டுகள், உலோகத் துண்டுகள், விண்கல் வால்மீன்கள் மற்றும் இயற்கை பொருட்களின் தொகுப்பே விண்வெளி குப்பைகள் ஆகும்.

விண்வெளி குப்பை என்பது இயற்கையாகவும், செயற்கையாகவும் விண்வெளியில் சேரும் பொருட்களை குறிக்கிறது.

விண்கற்கள், எரிநட்சத்திரத் தூசுகள் ஆகியவை இயற்கை விண்வெளி குப்பைகள் எனவும், மனிதர்களால் விண்ணுக்கு அனுப்பப்பட்டு செயலிழந்த மற்றும் வாழ்நாள் முடிந்த செயற்கைக்கோள், செயற்கைக்கோள் பாகங்கள் ஆகியவை செயற்கை விண்வெளி குப்பைகள் எனவும் அழைக்கப்படுகின்றன. 

தற்போதைய சூழ்நிலையில் செயற்கைக்கோள்களின் தேவை அதிகமானதால் செயற்கை விண்வெளி குப்பைகள், இயற்கை விண்வெளி குப்பைகளைவிட அதிகரித்தபடி உள்ளது.

குப்பைகள் சேர்வதற்கான காரணம் என்ன?

விண்ணுக்கு அதிக செயற்கைக்கோள்களை அனுப்புவதும், செயற்கைக்கோள்களை விண்ணுக்கு செலுத்தும்போது தொழில்நுட்பக் கோளாறுகளால் அவை வெடித்துச் சிதறுவதுமே விண்வெளியில் குப்பைகள் சேர்வதற்கு காரணமாகின்றன. இது மட்டுமல்லாமல், செயற்கைக்கோளை விண்ணுக்கு செலுத்த உதவும் ராக்கெட்டின் மேற்பகுதி விண்வெளி குப்பையாகவே இருக்கிறது. 

குறிப்பு : 

விண்வெளி குப்பைகளுக்கு தீர்வு காணும் வகையில் சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் சில கட்டுப்பாடுகளையும், வழிமுறைகளையும் வகுத்துள்ளது. 

செயற்கைக்கோள்களை ஏவும்போது வெடிப்பு விபத்துக்கள் நிகழாதபடி தக்க சோதனைகள் செய்தல், பிற செயற்கைக்கோள்கள் இருக்கும் பாதையில் குறுக்கிடாமல் தடுத்தல், செயற்கைக்கோள்களின் ஆயுள் முடிந்த பின் காற்று மண்டலத்திலோ அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள சுற்றுப்பாதையிலோ செலுத்துதல் ஆகியவை இந்த சங்கத்தின் முக்கியமான பரிந்துரைகள் ஆகும்.

 நாம் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்வோம், பூமியை மட்டுமல்ல... விண்வெளியையும் நாம் மாசுபடுத்திவிட்டோம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What is dust of space


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->