எந்த வயதில் கர்ப்பமடைவது மிக சிறந்தது.! தெரிஞ்சிக்கலாம் வாங்க.!
Which Age to get pregnant is safe
பண்டைய காலங்களில் கர்ப்பமடைதல் என்பது எந்தவித சிகிச்சையும் இல்லாமல் இயற்கையாகவே நடைபெற்றது. அதற்குக் காரணம் அந்த காலகட்டங்களில் பெண்கள் எடுத்துக் கொண்ட உணவும் அவர்கள் செய்த வேலையும் ஆகும். நாம் இன்றைய காலகட்டங்களில் தெருவுக்கு மூன்று கருத்தரிப்பு மையங்கள் உருவாகி இருக்கின்றன. அந்த அளவிற்கு கர்ப்பம் அடைவதில் இருக்கும் சிக்கல்கள் ஆண் மற்றும் பெண் என இருப்பாலருக்குமே அதிகமாக இருக்கிறது எந்த வயதில் பெண்கள் கர்ப்பம் அடைவது சிறந்தது என்று இந்த பதிவில் பார்ப்போம்:
பெண்கள் கர்ப்பம் அடைவதற்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சரியான வயது 22 முதல் 26 என மருத்துவர்கள் கணக்கிட்டு கூறுகின்றனர்.
இந்த வயதை தாண்டிய பெண்களுக்கு கருத்தரித்தலுக்கான வாய்ப்பு குறைத்து கொண்டே போகும் என்றாலும் கர்ப்பம் அடைவதற்கான வாய்ப்புகளும் இல்லாமல் இல்லை என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
30 வயது உடைய பெண்களில் 75 சதவீதம் பேர் ஒரு ஆண்டுகளில் கர்ப்பமடைவதாகவும் 91 சதவீதம் பேர் நான்கு ஆண்டுகளில் கர்ப்பம் அடைவதாகவும் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கிறது.
35 வயதில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் பெண்களில் 66 சதவீதம் பேர் ஒரு வருடத்தில் கர்ப்பம் அடைவதாகவும் 84 சதவீதம் பேர் நான்கு வருடங்களில் கர்ப்பம் அடைவதாகவும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
40 வயதில் கர்ப்பத்தை விரும்பும் பெண்களில் 44 சதவீதம் பேருக்கு ஒரு வருடத்தில் கர்ப்பம் கிடைத்து விடுகிறது 64% பெண்களுக்கு நான்கு வருடங்களில் கர்ப்பம் அடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மாறிவரும் கால சூழ்நிலைகள் வாழ்க்கை முறை ஆகியவையும் இவற்றில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே கர்ப்பத்திற்கு தயாராகும் பெண்கள் குறித்த காலத்தில் கர்ப்பமடைவது கற்ப காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளை குறைக்க உதவும்.
English Summary
Which Age to get pregnant is safe