நடைப்பயிற்சியின் போது எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடலாமா.?
While walking avoid oil foods
நமது உடல் எடையை குறைப்பதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்கும் நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். ஏனென்றால் உடற்பயிற்சிகளை விட நடைபயிற்சி உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தருகிறது.
ஆனால் இந்த உடற்பயிற்சியின் போது சிலர் தேவையற்ற உணவுகளை எடுத்துக் கொள்வதால் அதன் பலன் கிடைக்காமலேயே போய் விடுகிறது. அந்த வகையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் சிலர் நடைப்பயிற்சியை முடிந்தவுடன் எண்ணெய் பலகாரங்களான போண்டா, வடை, சமோசா போன்றவற்றை சாப்பிடுகின்றனர்.
அது மட்டுமில்லாமல் டீ, காபி போன்றவற்றையும் சாப்பிடுகின்றனர். இது போன்றவற்றை சாப்பிடுவதால் நாம் மேற்கொள்ளும் நடைப்பயிற்சியின் பலன்கள் எதுவும் கிடைக்காது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் காரணமாக நடை பயிற்சி மேற்கொள்ளும் போதும் முடிந்தவுடனும் என்னை பலகாரங்கள் மற்றும் டீ, காபி போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவ்வாறு சாப்பிட்டால் நாம் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பலன்கள் கிடைக்காது என கூறுகின்றனர்.
மேலும், எண்ணெய் பலகாரங்களுக்கு பதிலாக பயிறு வகைகள் மற்றும் கொண்டகடலை போன்றவற்றை சாப்பிடலாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
English Summary
While walking avoid oil foods