கால்நடைகள் குடையை கண்டவுடன் மிரளுவது ஏன்? - Seithipunal
Seithipunal


விலங்குகளின் நிறப்பார்வையை கண்டறிய பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. பாலூட்டிகளில் மனிதன், மனிதக் குரங்குகள், குரங்குகளை தவிர எந்த விலங்கிற்கும் நிறப்பார்வை இல்லை!

தேனீக்களுக்கு சிவப்பு வண்ணத்தை தவிர மற்ற வண்ணங்களை கண்டறியும் திறன் உள்ளன. அவற்றுக்கு சிவப்பு வண்ணம், பழுப்பு நிறமாக - கறுப்பு நிறமாக தெரிகின்றது.

ஆனால், தேனீக்கள் புறஊதாக் கதிர்களை கண்டறியும் திறன் பெற்றுள்ளன (இப்பண்பு மனிதருக்கு இல்லை). பறவைகளுக்கு நிறப்பார்வை அதிகத் திறன் வாய்ந்ததாக இருக்கிறது. பெண் பறவைகளைக் காட்டிலும் ஆண்பறவைகள் கண்ணைக் கவரும் பல வண்ணங்களைப் பெற்றுள்ளன.

இந்த வண்ணங்கள் தம் இன பெண் பறவைகளை, இனச்சேர்க்கைக்கு கவர்ந்திழுக்க உதவுகிறது. பொதுவாக விலங்குகளுக்கு நிறப்பார்வையைவிட மோப்ப சக்தி அதிகமாக உள்ளது.

கால்நடைகளுக்கு நிறப்பார்வை இல்லை. குடையைக் கண்டு மிரளுவது அதன் அசைவைப் பொறுத்துத்தான் என்று கூறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why animals fear in umbrella


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->