முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல்.!! - Seithipunal
Seithipunal


திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம்  ஜாமீன் உத்தரவில் தெரிவித்தது.

சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், ஜெயகுமார் மீது நில அபகரிப்பு புகார் சம்மந்தமாக வழக்கில் கைது செய்யப்பட்டதால், தற்போது சிறையில் இருந்து வருகிறார்.

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் வழக்கு விசாரணையில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஜெயக்குமார் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜெயக்குமார் ஜாமின் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

இந்நிலையில், நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் காவல் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15 days jail for jayakumar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->