17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


17 வயதுக்கு மேற்பட்டவர்கள் இனி வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

17 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தேர்தல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அவர்கள் 18 வயதை அடைந்தவுடன் அட்டை கிடைக்கும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இந்த மாற்றத்தின் மூலம் ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனக்கு 18 வயது நிறைவடையும் நாளில் வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்த முடியும் என ஆணையம் தனது தெரிவித்துள்ளது. 

17 வயது நிரம்பியவர்கள் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் வகையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய அனைத்து மாநில ஆணையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நான்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவர். அடையாள அட்டைக்கான புதிய விண்ணப்பம் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

17 years old also apply voter ID


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->