2026 தேர்தல் திமுக நினைப்பது போல் அவ்வளவு சுலபம் இல்லை! - தமிழிசை சவுந்தர்ராஜன் தாக்கு! - Seithipunal
Seithipunal


பாஜக தமிழ்நாடு மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்கும் போது,  உயர்கல்வித்துறை அமைச்சர் புறக்கணிப்பது நல்லதல்ல என்றும், அரசியலையும் தாண்டி நடக்கும் நிகழ்வுகள் அது என்று தெரிவித்த அவர், கல்வியையும் அரசியலையும் கலப்பது அரசியலில் ஒரு வாடிக்கையாக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், அனைத்து கல்வித்திட்டங்கள் முதல் உயர்கல்வியில் துணைவேந்தர்களை நியமிப்பது, ஆளுநர் பட்டமளிப்பு விழாக்களில் கலந்துகொள்வது உள்ளிட்ட எல்லாவற்றையும் இவர்கள் அரசியலாக்கி கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வேதனை என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் எங்களை தோற்கடிக்க ஆளே இல்லை என்பது போல பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றும், திமுகவில் விரிசல்களை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு விவாதங்கள் நடைபெற்று கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

2026 சட்டசபை தேர்தல் திமுக நினைக்கும் அளவிற்கு அவ்வளவு சுலபமாக இருக்காது என்று கூறிய அவர், எந்த ஆட்சிக்கு வந்தாலும் அது கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்கும் என்பது எனது கருத்து என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2026 election is not as easy as dmk thinks tamilisai soundarrajan attack


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->