2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தவெக முடிவு.. !! - Seithipunal
Seithipunal



நடிகர் விஜய் சமீபத்தில் "தமிழக வெற்றிக் கழகம்" என்ற பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கினார். இதையடுத்து நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தவெக போட்டியிடாது என்று அக் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்து இருந்தார். அதன்படி தவெக மக்களவைத் தேர்தலில் போட்டியிட வில்லை.

இந்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தவெக களமிறங்கும் என்று விஜய் அறிவித்துள்ளார். இதையடுத்து விஜய் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் எழுந்துள்ளது.

முன்னதாக திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும், பாஜக தலைமையில் ஒரு அணியும் 2026 சட்டமன்றத் தேர்தலில் களம் இறங்கவுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைக்கப் போவதாக செய்திகள் வெளியாகின.

மேலும் இதற்கான ரகசிய பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் கூட்டணி குறித்து செய்தி வெளியாகலாம் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால் விஜய்க்கு இது முதல் தேர்தல் என்பதால் இதில் தவெக தனித்தே களம் காண உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து தவெக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கையில், முதல் தேர்தல் என்பதால் தனித்து களமிறங்கினால் தான் தங்களது பலம் மற்றும் பலவீனம் குறித்து தெரிய வரும் என்று தலைவர் விஜய் நினைப்பதால் யாருடனும் அவருக்கு கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2026 TN Assembly Election TVK Decided to Contest Alone


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->