2004ல் உயிர் தப்பிய கிருஷ்ணசாமி! வெடிகுண்டு வீசிய வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை! - Seithipunal
Seithipunal


கடந்த 2004ம் ஆண்டு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் காரில் இருந்த இரண்டு பேர் படுகாயம் அடைந்த நிலையில் கிருஷ்ணசாமி நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இந்த கொலை முயற்சி தொடர்பாக 15 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இந்த வழக்கு நெல்லை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்ற நிலையில் இன்று நெல்லை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பினை அறிவித்துள்ளது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட சிவா என்கிற சிவலிங்கம், தங்கவேல் மற்றும் லட்சுமணன் ஆகிய மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 3 பேர் இறந்த நிலையில், மூவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 9 பேரை நெல்லை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 persons sentenced to life imprisonment DrKrishnaswamy attempt murder case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->