ஜோதிமணி உட்பட 5 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தைச் சேர்ந்த எம்பி ஜோதிமணி உட்பட 5 காங்கிரஸ் எம்பிக்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இந்த காலை மக்களவை தொடங்கியது முதல் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அசம்பாவிதம் காரணமாக பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதிக்க கோரியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்திற்கு வந்து விளக்கம் அளிக்க கோரியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியாக அமளில் ஈடுபட்டனர்.

இதனால் இன்று காலை கூடிய மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் இரண்டு மணிக்கு அவை கூடியதும் இதே விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து விளக்கம் அளித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகாஷ் சிங் ஜோஷி நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் யாரும் அரசியல் செய்யக்கூடாது எனவும், ஒரு சிலர் அரசியல் செய்வதையே வாடிக்கையாக வைத்துள்ளனர் எனக்கும் எதிர்க்கட்சிகளை குற்றம் சாட்டினார்.

மேலும் இது போன்ற சம்பவம் நடைபெறுவது முதல் முறை அல்ல எனவும், பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இது போன்ற சம்பவங்கள் பலமுறை நடைபெற்று உள்ளது எனவும் விளக்கமளித்தார். இந்நிலையில் இன்று காலை அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உட்பட ஐந்து எம்பிக்களை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. 

இந்த தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு வாக்கெடுப்பின் முடிவில் 5காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யும் தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டதால் ஜோதிமணி உட்பட ஐந்து எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 Congress MPs suspended including Jyotimani


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->