7ம் கட்ட வாக்குப்பதிவு : நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான 7ம் கட்ட கடைசி தேர்தலில் 57 மக்களவை தொகுதிகளுக்கு ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நாளை மாலையுடன் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது.

இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும், ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், மே 7ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப் பதிவும், மே 13ஆம் தேதி நான்காம் கட்ட மக்களவை தேர்தலும்,ம மே 20 தேதி 5ம் கட்ட மக்களவைத் தேர்தலும், மே 25ம் தேதி 6ம் கட்ட மக்களவை தேர்தலும் நடைபெற்று முடிந்தநிலையில், கடைசி கட்ட 7ம் கட்ட மக்களவை தேர்தல் ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ளது.

கடைசி கட்ட மக்களவை தேர்தலில் மொத்தம் 57 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பீகார் மாநிலத்தில் 8 தொகுதிகளும், இமாச்சல பிரதேசத்தில் 4 தொகுதிகளும் , ஜார்கண்ட் மாநிலத்தில் 3 தொகுதிகளும், ஒடிசா மாநிலத்தில் 6 தொகுதிகளும், பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தில் 13 தொகுதிகளும், மேற்கு வங்க மாநிலத்தில் 9 தொகுதிகளும் , சண்டிகர் யூனியன் பிரதேசம் என மொத்தம் 57 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

7ம் கட்ட இறுதி தேர்தலில் பிரதமர் மோடி 3வது முறையாக போட்டியிடும் வாரணாசி மக்களவை தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது. ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ள இறுதி கட்ட மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் அனைத்து வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்ற நிலையில், நாளை மாலை 6 மணியுடன் மக்களவை தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7th phase of polling Election campaign ends at 6 pm tomorrow


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->