பொறியியல் பட்டதாரிகளுக்கு ரூ.8 லட்சம்!....அமைச்சர் அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வழங்கும் வகையிலான தொழில் முதலீடு விரைவில் வர இருப்பதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சராக விளங்கி வரும்  டி.ஆர்.பி. ராஜா பல்வேறு முதலீடுகள் மற்றும் இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினருக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் விதமாக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் திருவாரூரில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகளுக்கு குறைந்தபட்சமாக ஆண்டுக்கு ரூ.8 லட்சத்திற்கு மேல் சம்பளம் கொடுக்கக் கூடிய வகையிலான புதிய தொழில் முதலீடு தமிழகத்தை நோக்கி வர இருப்பதாகவும், மேலும் அது குறித்து வெகு விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று கூறினார்.

அண்மையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அமெரிக்க சென்று பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில், தற்போது ஆண்டுக்கு ரூ.8 லட்சத்திற்கு மேல் சம்பளம் கொடுக்கக் கூடிய தொழில் முதலீடு வர இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளதால் பொறியியல் பட்டதாரிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8 lakhs for engineering graduates minister action announcement


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->