வெறிச்சோடிய புதுச்சேரி மாநிலம்!....பேருந்துகள் ஓடவில்லை!...பள்ளிகளுக்கு விடுமுறை!...முழு கடையடைப்பு! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில்  கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மக்களவை தேர்தல் முடிந்த பின்னர்  ஜூன் 16-ம் தேதி முன்தேதியிட்டு மின் கட்டண உயர்வை அரசு அமல்படுத்தியது.

மின் கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் கடந்த 2-ம் தேதி ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதை தொடர்ந்து,  18-ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர்.


இதற்கிடையே மின் கட்டணத்தில் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு 85 பைசா மானியம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இருந்த போதிலும் முழுமையாக மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், இந்தியா கூட்டணி கட்சி சார்பில் இன்று புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் என மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதில், வணிகர்கள், பேருந்து உரிமையாளர்கள்,  ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், மார்க்கெட் வியாபாரிகள் சங்கங்கள் ஆதரவு தெரிவித்து பந்த்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக இன்று 1-8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A deserted Puducherry state No buses running Schools off Complete shutdown


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->