எதிர்வரும் 16-ந்தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் துணைவேந்தர்கள் கூட்டம்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள பல்கலைகழகங்களுக்கு துணை வேந்தர்களை அரசே நியமிக்க வழிவகை செய்யும் 10 மசோதாக்கள் உள்ளிட்ட சில மசோதாக்களை சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பியது.

ஆனால், அவற்றுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி அதே சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி மீண்டும் கவர்னரின் ஒப்புதலுக்காக அவற்றை அரசு அனுப்பி வைத்தது.

மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு சட்டப்படி கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், அவர் ஒப்புதல் அளிக்காத நிலையில் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில்  வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டசபையில் 02-வது முறை நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பியது சட்டவிரோதம் என்றும், அந்த 10 பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாக்களுக்கும், உச்ச நீதிமன்றம் சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் (11-ந் தேதி) நள்ளிரவில் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தீர்ப்பு வெளியிடப்பட்டது. இணைதளத்தில் தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் தமிழ்நாடு அரசிதழில் தமிழக அரசின் அனைத்து திருத்த சட்ட மசோதாக்களும் வெளியிடப்பட்டன. 

இதன் மூலம் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை அரசே நியமிக்கும் திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 16-ந்தேதி பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A meeting of vice chancellors will be held under the chairmanship of MK Stalin on the 16th


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->