இன்று அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... அதைத் தொடர்ந்து நேபாளிலும் கூட....
earthquake America today followed by Nepal too
அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியாவிலுள்ள 'சான் டியாகோ' நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானது.இது இந்திய நேர்ப்படி காலை 10:08 மணிக்கு ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் மலை நகரமான ஜூலியனிலிருந்து 4கி.மீ தொலைவிலுள்ள சான் டியாகோ கவுண்டியில் மையம் கொண்டிருந்தது.இது சுமார் 193 கி.மீ தொலைவிலுள்ள 'லாஸ் ஏஞ்சல்ஸ்' கவுண்டி வரை வடக்கே உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல பின்அதிர்வுகள் ஏற்பட்ட நிலையில் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
அதுமட்டுமின்றி சான் டியாகோவிற்கு வெளியேவுள்ள கிராமப்புற சாலைகளில் பாறைகள் சரிந்து விழுந்தன.மேலும் நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல நேபாள நாட்டின் கோஷி மாகாணம் ஜாப்பா மாவட்டத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4 ஆக பதிவானது. இங்கும் இந்த நில நடுக்கத்தால் சேதங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
earthquake America today followed by Nepal too